பண்ருட்டி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு
பண்ருட்டி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தொிவித்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
பண்ருட்டி,
பண்ருட்டி எல்.என்.புரம் ஊராட்சியில் உள்ள குளக்கரை புறம்போக்கு பகுதியில் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்ததாக கூறி, அதை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்பேரில் தாசில்தார் ஆனந்தி, வட்டார வளர்ச்சி அதிகாரி சக்தி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையிலான போலீசாா் குளக்கரை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளை இடித்து அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர்.
அப்போது, அங்கு வசித்து வரும் பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு , ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். அப்போது அதிகாரிகள் தரப்பில் பேச்சுவர்த்தை நடத்தினர்.
அதில், ஆக்கிரமிப்பு பகுதிகளை சரியான முறையில் அளவீடு செய்யவில்லை என்றும், முறையாக அளவீடு செய்த பின்னர் ஆக்கரமிப்புகளை அகற்றுங்கள் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து நாளை(அதாவது இன்று) மீண்டும் அளவீடு பணியை மேற்கொள்வதாக கூறி, அதிகரிாகள் அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.