போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தை கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

வாணியம்பாடி போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தை கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-27 17:31 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடி போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தை கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி - ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் காங்கிரஸ் பெண் பிரமுகர் ஒருவருக்கும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் வீட்டுமனை தகராறு இருந்து வந்தது. இதில் எதிர் தரப்பை சேர்ந்தவருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சி நகர செயலாளர் செயல்பட்டதாக கூறி, அவர் மீது காங்கிரஸ் பெண் பிரமுகர் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி வருவதாகவும் அவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் அளித்தும், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் போராட்டம் நடத்தி யவர்களிடம் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.==========

Tags:    

மேலும் செய்திகள்