வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் என சூளுரைப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2022-10-02 07:22 GMT

சென்னை,

மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள் (காந்தி ஜெயந்தி) நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள் காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி , முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தி ஜெயந்தியையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"பேதங்களைக் கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்த அண்ணல் காந்தியார் பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் எனச் சூளுரைப்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்