பாஜக -அ திமுக கூட்டணியில் விரிசல் இல்லை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
ராகுல் காந்தி பிரச்சினையை பொறுத்தவரை காழ்ப்புணர்ச்சி இல்லை. நீதித்துறை சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று எல்.முருகன் கூறினார்.;
மதுரை
மத்திய மந்திரி எல்.முருகன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்ககளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இலங்கை கடற்படைக்கும், தமிழக மீனவர்கள் இடையே உள்ள பிரச்சினைகளை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். எப்போதெல்லாம் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுகிறார்கள் அப்போது தலையிட்டு நமது வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கிறார். படகுகள் விவகாரத்தில் கடந்த மாதம் 3 விசைப்படகுகளை விடுவித்திருக்கிறோம்.
மேலும் உள்ள விசைப்படகுகளை மீட்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழக படகுகளை விடுவிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. மீனவர்களுக்கு குரூப் இன்சூரன்ஸ் திட்டம் இருக்கிறது. சேதமடைந்த படகுகளுக்கும் இன்சூரன்ஸ் இருக்கிறது. மீனவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ராகுல் காந்தி பிரச்சினையை பொறுத்தவரை காழ்ப்புணர்ச்சி இல்லை. நீதித்துறை சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் தீர்ப்பு அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜனதா-அ.தி.மு.க.வில் எந்த விரிசலும் இல்லை. கூட்டணி இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.