"தொழில்நுட்ப நிறுவனங்களின் பணி நீக்க நடவடிக்கையால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை" - அமைச்சர் மனோ தங்கராஜ்
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஐ.டி. ஹப் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சென்னை கிண்டியில் இன்று 'இணையம் 3.0' என்ற பெயரில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக அளவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணி நீக்க நடவடிக்கையால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 30 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் ஐ.டி. ஹப் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.