அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்;
அந்தியூர்
அந்தியூர் தவுட்டுப்பாளையம் அம்பேத்கர் வீதியில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மலை கருப்பசாமி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ரோட்டோரமாக தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் சாக்கடை வடிகால் வசதி அமைக்கவும், தேங்கியிருக்கும் கழிவுநீரை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.