கெங்கவல்லி அருகே அடிபம்புடன் சேர்த்து சாலை அமைக்கப்பட்டதால் பரபரப்பு

கெங்கவல்லி அருகே அடிபம்புடன் சேர்த்து சாலை அமைக்கப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-08-24 20:41 GMT

கெங்கவல்லி:

கெங்கவல்லி அருகே ஒத்தலகாடு செல்லும் பகுதியில் சாலை விரிவாக்க பணி நடந்தது. அப்போது சாலை ஓரமாக இருந்த அடிபம்புடன் சேர்த்து சாலை அமைக்கப்பட்டது. இதனை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. தற்போது மண்ணுக்குள் பாதி புதைக்கப்பட்ட நிலையில் அடிபம்பு இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே அடிபம்பை அகற்றி விட்டு சாலை அமைக்க வேண்டும். இல்லை என்றால் அந்த அடிபம்பை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்