"திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் இல்லை"- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
அதிமுக ஆட்சியில் திட்டமிட்டுதலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறப்பாக இருந்ததாக எடப்பாடி பழனிசாமி பழனிசாமி கூறினார்.;
சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள திண்டமங்களத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி சமத்துவ பொங்கல் கொண்டாடினார். இதன் பின்னர் அவர் பேசியதாவது;
"இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் என்ன நன்மையை அனுபவித்தார்கள். ஏழை எளிய கடைக்கோடியில் உள்ள மக்களுக்கு எந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.
தமிழ்நாட்டு மக்கள் மீதும் துளியும் கவலையில்லை இல்லாத அரசாக திமுக உள்ளது. நியாய விலைக் கடைகளில் ஏழை, எளிய மக்களுக்கு முறையே பொருட்கள் வழங்க வேண்டும்.
நியாயவிலை கடைகளில் பாமாயில் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
அதிமுக ஆட்சியில் திட்டமிட்டுதலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறப்பாக இருந்தது. விவசாயிகளின் கவலைகளை போக்குகின்ற ஆட்சியை அதிமுக அரசாங்கம் அமைத்தது என்ற சிறப்பை பெற்றோம்."
இவ்வாறு அவர் கூறினார்.