பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா
சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா நடந்தது.;
திருவெண்காடு;
சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவிலில் ஆண்டு பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்தது. விழாவையொட்டி. நேற்று முன்தினம் இரவு தெப்பத் திருவிழா நடந்தது. இதையொட்டி பெருமாள் மேள தாளம் முழுங்க பக்தர்களால் தேருக்கு கொண்டுவரப்பட்டார். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு தெப்பத் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், கணக்கர் ரத்தினவேல், அர்ச்சகர் கோகுல் பட்டாச்சாரியார் ஆகியோர் செய்து இருந்தனர்.