தேவிகாபுரம் பாலமுருகன் கோவிலில் தெப்பல் உற்சவம்

தேவிகாபுரம் பாலமுருகன் கோவிலில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

Update: 2023-01-31 16:43 GMT

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா தேவிகாபுரம் கிராமத்தில் மலை மீது உள்ள பாலமுருகன் கோவிலில் தை கிருத்திகையை முன்னிட்டு 8-ம் ஆண்டு தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், திருநீர் ஆகியவை மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து உற்சவர் பாலமுருகனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து வந்தனர். அப்போது பக்தர்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

இதனையடுத்து மலைக்கு அருகே உள்ள கரட்டான் குளத்தில் தெப்பல் அமைத்து, அதில் பாலமுருகனை வைத்து 3 முறை சுற்றி வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷமிட்டனர்.

நேர்த்தி கடனாக வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி குளத்தில் உள்ள தண்ணீரில் விட்டு வணங்கினார்கள். மேலும் பக்தி  சொற்பொழிவு நடந்தது.

அதைத்தொடர்ந்து பாலமுருகனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.

ஏற்பாடுகளை பக்தர்கள், குழுவினர், தேவிகாபுரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்