நாகாத்தம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா

திருக்கழுக்குன்றம் அடுத்த கரியச்சேரி கல்குளம் கிராமத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது.;

Update:2023-04-07 14:35 IST

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நத்தம் கரியச்சேரி ஊராட்சிக்குட்பட்ட கரியச்சேரி கல்குளம் கிராமத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது. நாகாத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி குளத்தை 3 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழா ஏற்பாடுகளை நத்தம் கரியச்சேரி கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்