திருச்சுழியில் வயர்கள் திருட்டு
திருச்சுழியில் வயர்களை திருடி சென்றனர்.;
காரியாபட்டி,
திருச்சுழியில் பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலைய பகுதிகளில் போன் வேலை செய்யாததால் பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் இளநிலை பொறியாளர் கணேசமூர்த்தி (வயது 40) அந்த பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது தொலைபேசி நிலையத்திற்கு செல்லும் காப்பர் வயர்கள் திருடப்பட்டு இருப்பதை அறிந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.