கல்தூண்கள் திருட்டு

வயலில் வேலி அமைக்க வைத்திருந்த கல்தூண்களை திருடியவர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-09-17 01:42 IST

பூதலூர் அருகே உள்ள வெண்டயம்பட்டி கிராமத்தில் மனையேரிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கலை சபாபதி (வயது36). இவர் தனக்கு சொந்தமான புஞ்சை நிலத்தில் வேலி அமைப்பதற்காக 150 கல் தூண்களை இறக்கி வைத்திருந்தார். பின்னர் வந்து பார்த்த போது 40 கல்தூண்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பூதலூர் போலீஸ் நிலையத்தில் கலைசபாவதி புகார் செய்தார். அதன்பேரில் பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் மேல திருவிழா பட்டியைச் சேர்ந்த பூபதி (27), புதுக்குடி மெயின் ரோடு பகுதியைசேர்ந்த ராமலிங்கம் (30) ஆகியோர் 40 கல்தூண்களை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்