நிதி நிறுவன ஊழியரின் கவனத்தை திசை திருப்பி ரூ.93 ஆயிரம் திருட்டு

குடியாத்தத்தில் நிதி நிறுவன ஊழியரின் கவனத்தை திசை ரூ.93 ஆயிரத்தை திருடிச்சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2022-07-26 16:56 GMT

குடியாத்தம்

குடியாத்தத்தில் நிதி நிறுவன ஊழியரின் கவனத்தை திசை ரூ.93 ஆயிரத்தை திருடிச்சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நிதி நிறுவன ஊழியர்

குடியாத்தம் டவுன் கோட்டா சுப்பையா தெருவில் உள்ள நிதி நிறுவனத்தில் தயாளன் (வயது 60) என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் இன்று மதியம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று நிதி நிறுவனத்தின் கணக்கிலிருந்து ரூ.93 ஆயிரம் எடுத்துள்ளார்.

அந்த பணத்தை ஒரு பையில் போட்டுக்கொண்டு சைக்கிளில் நிதி நிறுவனத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சிவராஜபுரம் பகுதியில் வந்தபோது பின்னாடியே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரிடம் பேச்சுகொடுத்துள்ளனர். சிறிதுநேரத்தில் தயாளின் முதுகு பகுதியில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

ரூ.93 ஆயிரம் திருட்டு

உடனே தயாளன் சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கியிருக்கிறார்.

இந்த நேரத்தில் மர்ம நபர்கள் தயாளன் சைக்கிள் வைத்திருந்த ரூ.93 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சென்று விட்டனர்.

இதுகுறித்து நிதி நிறுவனத்தினர் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் டவுன் போலீசார் அப்பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

ஒரு கடையில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் தயாளனை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வருவது தெரிந்தது.

குடியாத்தம் நகரில் பொதுமக்கள் பங்களிப்போடு பொருத்தப்பட்ட பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் இயங்கவில்லை.

அதனால் நிதி நிறுவன ஊழியரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்க்க முடியவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்