கெடார் அருகே சிமெண்டு கடையில் ரூ.95 ஆயிரம் திருட்டு;மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

கெடார் அருகே சிமெண்டு கடையில் ரூ.95 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2023-10-06 18:45 GMT

கெடார்,

விக்கிரவாண்டி அருகே உள்ள வெங்கந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மதன்ராஜா (வயது 24). இவர் கெடார் அடுத்த சூரப்பட்டு கடை வீதியில் சிமெண்டு மூட்டைகள், இரும்பு, கம்பிகள் விற்பனை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மதியம் மதன்ராஜா தனது தம்பியான ரமணன்(22) என்பவரை கடையில் இருக்க சொல்லிவிட்டு விழுப்புரம் சென்றார். பின்னர் அவர் மாலை 4 மணியளவில் கடைக்கு திரும்பி வந்து பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.95 ஆயிரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மதன்ராஜா, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, மர்மநபர் ஒருவர் கடைக்கு பொருட்கள் வாங்க வந்ததுபோல் நடித்து ரமணனின் கவனத்தை திசை திருப்பி கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்