பெட்ரோல் பங்க்கில் ரூ.50 ஆயிரம் திருட்டு
அம்பை அருகே பெட்ரோல் பங்க்கில் ரூ.50 ஆயிரம் திருட்டு போனது.
அம்பை:
அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி மெயின் ரோட்டில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் இந்த பங்க்கில் வசூலான பணத்தை ஊழியர்கள் சரிபார்த்தனர். அப்போது அதில் ரூ.50 ஆயிரம் மாயமானது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் ஒருவர் பெட்ரோல் பங்க் அலுவலகத்துக்கு வருவதும், பின்னர் அங்கு பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் செல்வதும் பதிவாகி இருந்தது.
இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் மேலாளர் ஆறுமுகம், கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.