பெண்ணிடம் நூதன முறையில் ரூ.11 ஆயிரம் திருட்டு

ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பெண்ணிடம் நூதன முறையில் ரூ.11 ஆயிரம் திருடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-12-09 20:13 GMT

பொன்னமராவதி அருகே உள்ள காரணப்பட்டியை சேர்ந்தவர் துரைச்சாமி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 55). இவர் நேற்று பொன்னமராவதியில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அருகே இருந்தவர்களிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுக்கச் கூறியுள்ளார். அப்போது ஒரு வாலிபர் 2 முறை ஏ.டி.எம். கார்டை போட்டு பார்த்துவிட்டு பணம் வரவில்லை என்று கூறியுள்ளார். பின்னர் ராஜலட்சுமி கொடுத்த ஏ.டி.எம். கார்டை வைத்துக்கொண்டு வேறு ஒரு மாற்று ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்துள்ளார். பின்னர் ராஜலட்சுமியின் ஏ.டி.எம். கார்டை வைத்து சிறிது நேரத்தில் பொன்னமராவதியில் உள்ள வேறு ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம்.மில் ரூ.11 ஆயிரத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

இந்தநிலையில் ராஜலட்சுமி தனது வங்கி கணக்கை சரிபார்த்த போது ரூ.11 ஆயிரம் பணம் எடுத்திருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் பொன்னமராவதி சப்-இன்ஸ்பெக்டர் முத்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்