மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருட்டு;

Update: 2023-05-28 18:45 GMT

செஞ்சி

விழுப்புரம் அருகே உள்ள மேல்காரணை கிராமத்தை சேர்ந்தவர் ஆதீசுவரன்(வயது 44). இவர் நேற்று காலையில் தனது மோட்டார் சைக்கிளை தனது நிலத்திற்கு எதிரே நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை.

இதேபோல் அதே ஊரை சேர்ந்த அண்ணாதுரை மகன் ஜெயப்பிரகாஷ்(21) என்பவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடி சென்று விட்டார்.

இது குறித்த புகார்களின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்