கோவில் உண்டியலில் பணம் திருட்டு

கோவில்பட்டி அருகே கோவில் உண்டியலில் பணம் திருடப்பட்டது.

Update: 2023-10-14 19:00 GMT

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்திற்குட்பட்ட சிந்தாமணி நகர் 2-வது தெருவில் முத்துமாரியம்மன், கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வ.உ.சி. நகரை சேர்ந்த மாரிசெல்வம் பூசாரியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் பூஜைகளை முடித்துவிட்டு மாரிசெல்வம் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

நேற்று காலையில் வந்து பார்த்த போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, கோவில் உண்டியலில் இருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் சூலாயுதம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கோவில் தலைவரும், கவுன்சிலருமான சந்தானம் கொடுக்க புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்