வீட்டின் கதவை உடைத்து பணம்- வெள்ளி பொருட்கள் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து பணம்- வெள்ளி பொருட்களை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2022-10-12 20:51 GMT

ஸ்ரீரங்கம் மேல உத்தரவீதியை சேர்ந்தவர் ஸ்ரீகரா (வயது 31) இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் வெள்ளி டம்ளர் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்