நாகர்கோவிலில் அடுத்தடுத்த வீடுகளில் நகை-பொருட்கள் திருட்டு

நாகர்கோவிலில் அடுத்தடுத்த வீடுகளில் நகை-பொருட்கள் திருட்டு போனது.;

Update: 2022-10-05 21:40 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் அடுத்தடுத்த வீடுகளில் நகை-பொருட்கள் திருட்டு போனது.

நாகர்கோவில் அனந்தன்பாலம் சானல்கரை வசந்தம் நகரை சேர்ந்தவர் பாபுகுட்டன் (வயது 41), அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர் குடும்பத்துடன் தக்கலையில் உள்ள தன் தாயார் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்புற கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாபுகுட்டன் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்து பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. வீட்டில் பீரோவில் வைத்திருந்த ஒரு செல்போன் மற்றும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு யாரோ மர்ம நபர்க பொ ருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதே போல பாபுகுட்டன் வீட்டுக்கு அருகே வசித்து வரும் பாலநடேசன் என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் புகுந்து ஒரு லேப் டாப்பை திருடி சென்றது தொியவந்தது. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் ஆசாரிபள்ளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு இருந்தது. ஆனால் வீட்டில் பல இடங்களில் மோப்பம் பிடித்த அந்த நாய் வெளியே அங்குமிங்குமாக ஓடியதே தவிர யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வந்து மர்ம நபர்களின் ரேகையை சேகரித்தனர். அடுத்தடுத்து நடந்த இந்த 2 திருட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்