வியாபாரி வீட்டில் நகை-பணம் திருட்டு

உசிலம்பட்டியில் உள்ள வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.;

Update: 2023-08-27 20:53 GMT

உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி சத்யா நகரைச் சேர்ந்தவர் தங்கதுரை. முறுக்கு வியாபாரி. இவர் ஆந்திராவில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் 2 பீரோவில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்கதுரை ஆந்திராவில் முறுக்கு வியாபாரம் செய்து வருவதால் அவர் வந்தால் தான் கொள்ளை போன நகை-பணம் உள்ளிட்ட பொருட்கள் எவ்வளவு என தெரிய வரும் என போலீசார் ெதரிவித்தனர். இது குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்