வீட்டில் நகை, பணம் திருட்டு

வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.;

Update: 2023-07-26 19:29 GMT

இட்டமொழி:

பரப்பாடி அருகே உள்ள காத்தநடப்பு கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 62). விவசாயியான இவர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 2 பவுன் தங்க நகைகள், ரூ.500 திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மகாலிங்கம் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்தார். நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மேல் விசாரணை நடத்தி, மர்மநபர்களை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்