ராணுவ வீரர் வீட்டில் பொருட்கள் திருட்டு; 4 பேர் கைது

ஆலங்குளம் அருகே ராணுவ வீரர் வீட்டில் பொருட்கள் திருடியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-06 19:00 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் குழந்தைசாமி மகன் சுரேஷ் (வயது 32). ராணுவ வீரரான இவர் அண்மையில் அதே பகுயைச் சேர்ந்த வக்கீல் அசோக்குமார், அவரது பெரியப்பா துரைராஜ் ஆகியோரை வெட்டிப்படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதனால் நெட்டூரில் உள்ள சுேரஷின் வீட்டுக்கதவு பூட்டியே கிடந்தது. இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பித்தளை பாத்திரங்களை திருடிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து சுரேஷின் நண்பர் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் குமார், சுரேஷ்குமார், பிரகாஷ் மற்றும் இந்திரஜித் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் ஆலங்குளத்தில் உள்ள கடை ஒன்றில் விற்கப்பட்ட பித்தளை பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்