கடலூர் முதுநகர் அருகே மின்மாற்றியில் தாமிர கம்பிகள் திருட்டு

கடலூர் முதுநகர் அருகே மின்மாற்றியில் தாமிர கம்பிகள் திருடுபோனது.;

Update: 2023-06-09 18:45 GMT

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே பூண்டியங்குப்பம் பகுதியில் மின்சார வாரியம் சார்பில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இதில் இருந்த 25 கிலோ எடையுள்ள தாமிர கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து உதவி மின்பொறியாளர் மணிவண்ணன் (வயது 39) கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து தாமிர கம்பிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்