நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள மேட்டு பிராஞ்சேரியில் தனியாருக்கு சொந்தமான சோலார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் காவலாளியாக நாங்குநேரி அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்த முருகன் (வயது 48) என்பவர் இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் நிறுவனத்தின் வளாகத்தில் பார்த்தார். அப்போது அங்கு ஒரு மூலையில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 300 கிலோ எடை கொண்ட தாமிர கம்பிகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் உடனடியாக கங்ைககொண்டான் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமிர கம்பிகளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு போன தாமிர கம்பிகளின் மதிப்பு ரூ.90 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.