கட்டுமான கம்பிகள் திருட்டு

கட்டுமான கம்பிகள் திருட்டு;

Update: 2022-08-29 21:02 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே முளங்குளி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 40). கட்டிட ஒப்பந்ததாரரான இவர் அந்த பகுதியில் உள்ள தனது நிலத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் தொட்டி கட்டும் பணி தொடங்கியுள்ளார். அதற்காக அவர் பில்லர் எழுப்பி கம்பிகள் கட்டப்பட்டிருந்தது.

சம்பவத்தன்று அந்த கம்பிகளை அதே பகுதியை சேர்ந்த கொத்தனாரான வில்சன் (47), ரெதீஷ் ஆகிய இருவரும் வெட்டி திருடி சென்றுள்ளதாக ஸ்ரீகுமார் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த கம்பிகளின் மதிப்பு ரூ.9 ஆயிரமாகும். அந்த புகாரின் பேரில் 2 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்