மெரினா கலங்கரை விளக்கம் அருகே ஆட்டோவில் வைத்திருந்த பணம் திருட்டு

மெரினா கலங்கரை விளக்கம் அருகே ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.;

Update: 2022-08-10 09:35 GMT

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் குட்டி கிராமணி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவர் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மெரினா கலங்கரை விளக்கம் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு, அங்குள்ள 'டீ' கடைக்கு சென்றார்.

'டீ' சாப்பிட்டு வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டோவில் தனது இருக்கையின் அருகே இருந்த பெட்டி உடைக்கப்பட்டிருந்தது. அதில் அவர் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு, ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சு ஆகியவை திருட்டு போயிருந்தது.

இதுகுறித்து ரமேஷ், மெரினா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்