டிராக்டரில் பேட்டரி திருட்டு

சிவகாசி அருகே டிராக்டரில் பேட்டரி திருடி சென்றனர்.;

Update: 2023-04-10 19:35 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வைரமுத்து (வயது 48). இவருக்கு சொந்தமான தோட்டம் அதே பகுதியில் உள்ளது. அதில் டிராக்டரை நிறுத்தி வைத்திருந்தார். சம்பவத்தன்று தோட்ட பணிக்காக டிராக்டரை எடுக்க முயன்றபோது அதில் இருந்த பேட்டரி திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து வைரமுத்து எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்