போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள துய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 35). இவர் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரான துய்யனூர் கிராமத்திற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பு அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கினார். பின்னர் அதிகாலை 2 மணிக்கு எழுந்து பார்த்தபோது தனது வீட்டின் முன்பு நிறுத்திவைத்திருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து முத்து அளித்த புகாரின் பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.