வேடசந்தூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து 90 கோழிகள் திருட்டு

வேடசந்தூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து 90 கோழிகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.;

Update: 2023-04-30 20:30 GMT

வேடசந்தூர் அருகே உள்ள குஞ்சுவீரன்பட்டியை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 30). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் அப்பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்தில் அவர் 100-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயராமின் தோட்டத்துக்குள் மர்மநபர்கள் புகுந்து, அங்கு 90 கோழிகளை திருடிச் சென்றனர்.

இதற்கிடையே நேற்று காலை வழக்கம்போல் ஜெயராம் தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது ஏராளமான கோழிகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து அவர் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல் நத்தப்பட்டி, காளனம்பட்டி பகுதிகளிலும் ஒருசிலரது வீடுகளில் இருந்த கோழிகள் திருடுபோனது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்