காரில் வைத்திருந்த 87 பவுன் நகை திருட்டு

காரில் வைத்திருந்த 87 பவுன் நகை திருட்டு

Update: 2022-10-06 20:07 GMT


தேனி நகர் ஜெகநாதன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 54). இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடையின் மேலாளர் சயூபு, டிரைவர் ராஜகோபால் ஆகியோர் நகையுடன் காரில் மதுரை வந்தனர். பின்னர் அவர்கள் அரசரடி பகுதியில் காரை நிறுத்திவிட்டு அங்குள்ள ஓட்டலில் சாப்பிட சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது காரில் இருந்த 87 பவுன் நகையை காணவில்லை. இது குறித்து அவர்கள் கடை உரிமையாளரிடம் தெரிவித்தனர். அவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கடை மேலாளர், டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்