வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை- வெள்ளிப்பொருட்கள் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை- வெள்ளிப்பொருட்கள் திருட்டு

Update: 2022-10-01 20:04 GMT

தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடி விட்டு மிளகாய் பொடியை தூவி விட்டு சென்ற மா்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

வீட்டின் பூட்டு உடைப்பு

தஞ்சையை அடுத்த பிள்ளையார் பட்டி அருகே உள்ள செல்லியம்மன்நகரை சேர்ந்தவர் ஜெயசந்திரன் (வயது 66). சம்பவத்தன்று இவரும், இவருடைய மனைவியும் சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றிருந்தனர்.

நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு ஜெயசந்திரன் வந்தார். அப்போது தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு கிடந்தது.

5 பவுன் நகை- வெள்ளிப்பொருட்கள்

அதுமட்டுமின்றி பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ.12 ஆயிரம் மற்றும் வீட்டில் இருந்த வெள்ளிப்பொருட்கள் இல்லாதது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயசந்திரன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்