5 பவுன் நகைகள் திருட்டு

5 பவுன் நகைகள் திருட்டு;

Update: 2022-06-25 15:12 GMT

நன்னிலம்:

பேரளம் அருகே கிரக பிரவேசத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பது போல் நடித்து 5 பவுன் நகைகளை திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

5 பவுன் நகைகள் திருட்டு

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள வேலங்குடி தென்கரை மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிவாசகம்(வயது32). நேற்றுமுன்தினம் இவர் வெளியே சென்றுவிட்டார். இந்தநிலையில் மணிவாசகத்தின் தாயார் ராணி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மணிவாசகம் தனது நண்பர் என்றும், வீடு கிரக பிரவேசத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்றும், இதற்கு மா இலை வேண்டும் என்றும் ராணியிடம் கூறினார். இதனை நம்பிய அவர் வீட்டின் பின்புறம் மா இலை பறிக்க சென்றார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த பீரோவை திறந்து 5 பவுன் நகைகளை திருடிகொண்டு தப்பி சென்றுவிட்டார். பின்னர் வந்து ராணி பார்த்த போது பீரோவில் இருந்த நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து மணிவாசகம் பேரளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்