5 ஆடுகள் திருட்டு

திருமங்கலம் அருகே 5 ஆடுகள் திருடப்பட்டது.

Update: 2023-05-02 20:25 GMT

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே உள்ள விடத்தக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 42). விவசாயி. அத்துடன் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். வெளியூர்களுக்கு சென்று கிடை அமர்த்துவது வழக்கம். இதேபோல் கடந்த ஒரு வாரமாக ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தோட்டத்தில் கிடை அமர்த்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி காலை 9 மணிக்கு வழக்கம் போல் தனது ஆடு குட்டிகளை ஆட்டு தொழுவத்தில உள்ள பஞ்சாரத்தில் வைத்து மூடிவிட்டு மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டி சென்றார். மாலை 6 மணிக்கு திரும்பி வந்து பார்த்த போது பஞ்சாரத்தில் மூடி வைக்கப்பட்டிருந்த 5ஆட்டுக்குட்டிகளை காணவில்லை. அதை யாரோ திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்