ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தான செல்வம் (வயது 42). இவர் சூலக்கரை அருகே ஒரு தோட்டத்தில் ஆட்டுக்கிடை போட்டிருந்தார். இதற்கு பொறுப்பாக பாழாந்தத்தை சேர்ந்த கருங்கன் என்பவரை நியமித்து இருந்தார். சம்பவத்தன்று சந்தானச்செல்வம் வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் கருங்கனை கவனிக்க சொல்லி இருந்தார். கருங்கன் மேலும் 2 பேரின் துணையுடன் கிடையிலிருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 4 ஆடுகளை திருடி அனுப்பி விட்ட நிலையில் இது பற்றி தெரியவந்த சந்தானச்செல்வம் சூலக்கரை போலீசில் கருங்கன் மீது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.