வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
தைப்பூசத்துக்கு கோவிலுக்கு சென்றபோது முதியவரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.;
தைப்பூசத்துக்கு கோவிலுக்கு சென்றபோது முதியவரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தைப்பூச பாதயாத்திரை
கோவை கணபதி அருகே உள்ள காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 62). இவருடைய மனைவி ரஞ்சனா (46). இவர்கள் 2 மகள்களுடன் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மகேந்திரன் வீட்டை பூட்டி விட்டு தைப்பூசத்திற்காக மருதமலை கோவிலுக்கு குடும்பத்துடன் பாதயாத்திரை சென்றார்.
20 பவுன் நகை திருட்டு
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மகேந்திரன் வீட்டின் அருகில் இருப்பவர்கள் போன் செய்து மகேந்திரனின் வீடு திறந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
இதனை அடுத்து மருதமலைக்கு பாதயாத்திரை சென்ற மகேந்திரன் தனது குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
உடனடியாக வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து மகேந்திரன் உடனடியாக சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் விரைந்து வந்த சரவணம்பட்டி போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகையை பதிவு செயதனர்.
அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.