பேன்சி கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு

பல்லடம் பகுதியில் பேன்சி கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் திருடப்பட்டு உள்ளது.

Update: 2023-07-09 13:52 GMT

பல்லடம்

பல்லடம் கடைவீதியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் உள்ளது. இங்கு பாரதிபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை இவரது கடையின் கதவு திறந்து கிடப்பதாக அருகே உள்ள கடைக்காரர்கள் போன் மூலம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. கடையில் இருந்த கவரிங் செயின், பேன்சி பொருட்கள் உள்ளிட்ட ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கடையில் ஏற்கனவே ஒருமுறை திருட்டுப்போனது. தற்போது 2-வது முறையாக திருட்டு நடைபெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்