2 வீடுகளில் நகை- பணம் திருட்டு

திருக்கோவிலூர் அருகே 2 வீடுகளில் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2022-06-06 17:16 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே திருவரங்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 44). நேற்று முன்தினம் இரவு திருவரங்கம் பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து காற்றுக்காக ஏகாம்பரம் தனது வீட்டின் பின்புற கதவை திறந்து வைத்துவிட்டு வீட்டுக்குள் குடும்பத்தினருடன் தூங்கினார். இதைநோட்ட மிட்ட மர்மநபர்கள், ஏகாம்பரத்தின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 4 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் ஏகாம்பரம் எழுந்து பார்த்தபோது, வீட்டு பீரோவில் இருந்த நகை-பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் அதே ஊரைச்சேர்ந்த குப்பு என்பவரின் வீட்டுக்குள்ளேயும் மர்மநபா்கள் புகுந்து அங்கிருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை திருடிச்சென்றனர். இது குறித்து தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 2 வீடுகளிலும் திருடுபோன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்