பெரியகுளம் அருகே கருப்பசாமி கோவிலில் திருட்டு

பெரியகுளம் அருகே கருப்பசாமி கோவிலில் பொருட்கள் திருடுபோனது.;

Update: 2023-10-25 21:15 GMT

பெரியகுளத்தை அடுத்த எ.புதுப்பட்டியில், பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் வாய்க்கால் கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அழகர் என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் அழகர் வழக்கம்போல் கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று காலை அவர் கோவிலுக்கு வந்தபோது, கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது உள்ளே இருந்த கலசம், பித்தளை பொருட்கள், பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து கோவில் கமிட்டி தலைவர் அன்னக்கொடி, பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்