செல்போன் கடையில் திருட்டு

ஒரத்தநாட்டில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட்டு நடந்தது.

Update: 2023-09-28 19:50 GMT

ஒரத்தநாடு பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஒரத்தநாடு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ஒரத்தநாடு கடைத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் ஒரத்தநாடு பெரியார் சிலை அருகே உள்ள ஒரு செல்போன் கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்த மர்ம கும்பல் அங்கு இருந்த செல்போன்கள், பணம் உள்ளிட்டவைகளை திருடி சென்றது. அதேபோல் கும்பகோணம் அரசலாறு பகுதியை சேர்ந்த கருணாகரன் (வயது 24) என்பவர் ஒரத்தநாட்டில் தங்கி கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு அவர் தங்கியிருக்கும் அறைக்கும் கீழே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். நள்ளிரவில் அவரது மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து செல்போன் கடையின் உரிமையாளர் வடக்கிகோட்டை நவீன்குமார் (29) மற்றும் கருணாகரன் ஆகியோர் ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தனர். தஞ்சையில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்