தர்மபுரியில் அடுத்தடுத்து துணிகரம்2 வீடுகளில் கதவை உடைத்து நகைகள் திருட்டுமர்ம நபர்கள் கைவரிசை

Update: 2023-05-09 19:00 GMT

தர்மபுரியில் 2 வீடுகளில் கதவை உடைத்து நகைகளை திருடி கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நகை திருட்டு

தர்மபுரி குள்ளனூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 42), விவசாயி. இவர் வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். சில மணி நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் வெளிப்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இது தொடர்பாக சந்திரன் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

பரபரப்பு

தர்மபுரி ஏ.கொல்லஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி (28) தொழிலாளி. இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வெளிப்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தன. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

வீட்டை பூட்டிச் செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சுகந்தி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தர்மபுரியில் 2 வீடுகளில் அடுத்தடுத்து கதவை உடைத்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்