செருப்பு கடையில் ரூ.30 ஆயிரம் பொருட்கள் திருட்டு

Update: 2023-04-16 19:00 GMT

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சாவடியூர் கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் (வயது 50) ஷூ மற்றும் செருப்பு விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேடியப்பன் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை மீண்டும் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ.6 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த ஷூ மற்றும் செருப்புகள் என மொத்தம் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வேடியப்பன் ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஊத்தங்கரை போலீசார் செருப்பு கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்