செல்போன் கடையில் திருட்டு

செல்போன் கடையில் திருட்டு போனது.;

Update: 2023-04-11 20:58 GMT

வடக்கன்குளம்:

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் அந்தோணி பெலிக்ஸ். இவர் வடக்கன்குளம் மெயின் ரோட்டில் செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை அவர் மீண்டும் கடையை திறக்க வந்தபோது, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக பணகுடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், கடையில் இருந்து செல்போன்கள், ப்ளூடூத், ஹெட்போன், பவர் பேங்க் உட்பட சுமார் ரூ.48 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன் கடையில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்