வாலிபரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
வாலிபரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.;
ராமநாதபுரம் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் தெருவை சேர்ந்த கலைமணி மகன் விக்ரமன் (வயது 22). நேற்று முன்தினம் அவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். வீட்டிற்குள் டி.வி.யில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பார்த்து கொண்டிருந்தாராம். போட்டி முடிந்து இரவில் வெளியில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விக்ரமன் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.