பல்பொருள் அங்காடியில் திருட்டு

நாமக்கல்லில் பல்பொருள் அங்காடியில் திருட்டு சம்பவம் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.na;

Update: 2023-04-01 18:45 GMT

நாமக்கல் அருகே உள்ள வசந்தபுரத்தை சேர்ந்தவர் செல்வராசு. இவர் நாமக்கல் கடைவீதியில் உள்ள நகை கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த 26-ந் தேதி பணிக்கு வந்த செல்வராசு, தனது மோட்டார் சைக்கிளை கடைக்கு முன்பு நிறுத்தி இருந்தார். அப்போது அவர் மோட்டார் சைக்கிள் சாவியை வண்டியிலேயே வைத்து விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. பணி முடிந்ததும் வாகனத்தை எடுக்க வந்தபோது, மோட்டார் சைக்கிள் திருட்டு போய் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

இதேபோல் நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தனசேகரன் என்பவருக்கு சொந்தமான பல்பொருள் ஊழியர் இல்லாத நேரத்தில் முந்திரி, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை பெண்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது 4 பெண்கள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. ஆங்காங்கே தொடர் திருட்டு சம்பவம் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்