மோட்டார்சைக்கிள் திருட்டு

மோட்டார்சைக்கிள் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-12-19 18:28 GMT

திருப்புவனம், 

திருப்பாச்சேத்தியில் உள்ள காமராஜர் காலனியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 52). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார்சைக்கிளில் திருப்புவனம் வந்துள்ளார். கோர்ட்டு முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றுள்ளார். சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. மர்ம நபர் திருடியது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்