அரசு ஊழியரின் வாகனம் திருட்டு

அரசு ஊழியரின் வாகனம் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-08 13:59 GMT


ராமநாதபுரம் அருகே உள்ள வாணி போக்குவரத்து நகரை சேர்ந்த விஜயகுமார் மகன் பூமிநாதன் (வயது48). இவர் ராமநாதபுரம் நிலஅளவை பிரிவு அலுவலகத்தில் சார்பு ஆய்வாளராக பணி செய்து வருகிறார். இவர் ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். சில நிமிடங்கள் கழித்து தனது வாகனத்தை பார்த்தபோது காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பூமிநாதன் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்