சேலத்தில், தனியார் வங்கியில் பெண் ஊழியரிடம் ரூ.2¾ லட்சம் திருட்டு

சேலத்தில், தனியார் வங்கியில் பெண் ஊழியரிடம் ரூ.2¾ லட்சம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update: 2022-08-26 22:40 GMT

சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 34). இவர் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தங்க நகைக்கடன் வணிக மேம்பாட்டு நிர்வாகியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சேலத்தை சேர்ந்த ஒருவரிடம் கடனாக பெற்ற ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 600-யை தனது பையில் வைத்துவிட்டு வங்கியில் பணிபுரிந்தார்.

மாலையில் அந்த பையை எடுத்து பார்த்த போது அவர் வைத்திருந்த பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி பணம் திருட்டு போனது குறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் ஊழியரிடம் பணத்தை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்