லாரியில், 425 லிட்டர் தேங்காய் எண்ணெய் டப்பாக்கள் திருட்டு

மத்தூர் அருகே லாரியில் வைக்கப்பட்டிருந்த 425 லிட்டர் தேங்காய் எண்ணெய் டப்பாக்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-07-21 18:25 GMT

மத்தூர்

தேங்காய் எண்ணெய் பெட்டிகள்

புதுச்சேரி மாநிலம் செழியமேடு வாணிதாசன் தெருவை சேர்ந்தவர் திருசேரன் (வயது 57), லாரி டிரைவர். இவர் கடந்த 19-ந் தேதி புதுச்சேரியில் இருந்து தேங்காய் எண்ணெய் பெட்டிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு புறப்பட்டார்.

அவர் ஓட்டி வந்த லாரி 19-ந் தேதி இரவு 9.30 மணி அளவில் புதுச்சேரி- ஹூப்ளி சாலையில் மத்தூர் அருகே மூக்கா கவுண்டனூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவர் திருசேரன் லாரியை நிறுத்தி பின்னால் சென்று பார்த்தார்.

போலீசில் புகார்

அப்போது லாரியில் இருந்த எண்ணெய் பெட்டிகள் சில காணாமல் போய் இருந்தன. இது தொடர்பாக டிரைவர் லாரியின் பின்னால் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை எண்ணி பார்த்த போது 425 லிட்டர் தேங்காய் எண்ணெய் டப்பாக்கள் வைக்கப்பட்டிருந்த 39 பெட்டிகள் காணாமல் போய் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.95 ஆயிரம் ஆகும்.

இது குறித்து திருசேரன் மத்தூர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேங்காய் எண்ணெய் டப்பாக்கள் அடங்கிய பெட்டியை திருடிச்சென்ற மர்ம நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்